Pages

Sunday, May 1, 2011

NanbaN UpDates

நண்பன் படத்தை பற்றி தினம் ஒரு தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் சூட்டி‌ங்கை முடிந்த நண்பன் குழு, இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அந்தமான் தீவில் படமாக்கி வருகிறது.
இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான “3-இடியட்ஸ்” படம் தமிழில் “நண்பன்” என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்க, பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். பொதுவாக ஷங்கர் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுப்பார்.ஆனால் நண்பன் படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி கொண்டு இருக்கிறார். படத்தின் பாதி காட்சிகளை படமாக்கிவிட்ட ஷங்கர், இப்போது க்ளைமாக்ஸ் காட்சிக்காக அந்தமானில் முகாமிட்டுள்ளார். தற்போது அந்தமானில் உள்ள ரம்மியமான பகுதியில் நண்பன் சூட்டிங் நடந்து வருகிறது. தீபாவளிக்கு நண்பன் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment: