ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையின் கருத்துக்கணிப்பு திமுக கூட்டணியை தெம்பாக பேச வைத்திருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இது நிஜமாக இருக்குமோ என்று சின்ன ஜர்க்குடன் கவனிக்கிறதாம்.
ஆனால் இது பற்றி இரு தரப்புமே சிறிதளவு சந்தோஷம், சிறிதளவு துக்கத்தை வெளிப்படுத்தியதுடன் சரி. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் நடிகர் விஜய் மட்டும் இப்படி ஒரு கருத்துக்கணிப்பு வந்ததும் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் போன் செய்து விசாரித்தாராம்.
விபரங்களை தெளிவாக அறிந்தும் கொண்டாராம்.அவரது விசாரிப்பில் தெரிந்த பதற்றம் எங்களை ஆச்சர்யப்படுத்தியது என்கிறார்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள்.
ஆனால் இந்த கருத்துக்கணிப்பு சில மாவட்டங்களில் மட்டும்தான் எடுக்கப்பட்டது என்ற தகவலை விஜய்யிடம் கூறி அந்த நேரத்திற்கு ஆசுவாசப்படுத்தினார்களாம் அவரை.