கர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ’’சட்டப்படி குற்றம்’’. இப்படத்தில் சத்யராஜ், சீமான், ராதாரவி நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று
சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சத்யராஜ் தலைமையிலான மக்கள் இயக்கத்தால் (இது விஜய் ரசிகர் மன்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) கடத்தப்பட, அரிசி கடத்துகிறார்கள், சாராயம் கடத்துகிறார்கள்! இப்போது அதிகாரிகளைகடத்துகிறார்கள். எங்கே சார் போகுது நாடு'' என அரசு அதிகாரிகள் ஒரு காட்சியில் பேசிக் கொள்கிறார்கள்.
கனிம வள ஊழல் தொடர்பாக கைதான ரங்கராசன் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக ஆஜராகிறார் சீமான். அப்போது நீதி தேவதையின் கண்களை மட்டும் இவர் கட்டவில்லை.
நாட்டு மக்கள் எல்லோரின் கண்களையும் கட்டி விட்டார் என்கிறார் சீமான். வழக்கு விசாரணையின் போது ரங்கராசனுக்கு, சேர் (இருக்கை) கொடுங்கள் என ஒருவர் சொல்ல, நீதிபதி அவர்களே உங்களுக்கும் ஒரு ஷேர் தந்து கூட்டு சேர்த்து விடப்போகிறார் என்று கமெண்ட் அடிக்கிறார் மற்றொருவர்.
1 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு ஒரு வருஷம் ஜெயில், 5 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு 5 வருஷம் ஜெயில். ஒருலட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவனுக்கு எத்தனை ஆண்டு என கேட்க, நீதிபதியாக இருக்கும் ராதாரவி, எத்தனை சைபர் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார்.
வழக்கின் தீர்ப்பின் போது ராதாரவி, இதுவரை நீங்க எழுதிக் கொடுத்த வசனங்களை இதுவரை பேசியிருக்கிறோம்.
இப்போதாவது சுயசிந்தனையுடன் தீரப்பு எழுத விடுங்கள் என்கிறார்.
நடப்பு அரசியலையும், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளையும் நினைவூட்டும் வசனங்கள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளன.
இந்தப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகரும், நடிகர் சத்யராஜூம் கூறியுள்ளனர்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் சத்யராஜும், எஸ்.ஏ.சந்திரசேகரும் பேட்டி அளித்தபோது,, ‘’நான் இந்தப்படத்தில் நடித்ததற்காக பயப்படவில்லை. ஏன் என்றால் எனக்கு ஏதும் பிரச்சனை என்றால் புரட்சித்தலைவர் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் சத்யராஜ்.
அவர் மேலும், ‘’வள்ளல் என்று ஒருபடத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது பண கஷ்டம் வந்தது. என் நண்பர் விஜயகாந்த் இதைத்தெரிந்துகொண்டு எனக்கு பண உதவி செய்தார். அவர் பண உதவியே செய்வார். மற்ற உதவியா செய்யமாட்டார்.
அதே போல் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு அஜீத் நண்பனாக இருப்பதால் அஜீத் ரசிகர்களும் வருவார்கள்.
ஒரு பிரச்சனை என்றால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய்,அஜீத் ரசிகர்கள் வந்து களத்தில் நிற்பார்கள். அதனால் நான் யாருக்கும் பயப்படவில்லை. நீங்களும் பயப்படவேண்டாம். நம்மை அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்’’ என்று கூறினார்சத்யராஜ்.
No comments:
Post a Comment