தொடங்கிய வேகத்திலேயே முற்றுப்புள்ளி விழும் போலிருக்கிறது, மணிரத்னத்தின் மெகா பட்ஜெட் படமான கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு!
படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் முடிவாகி, ஆளாளுக்கு பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படம் தொடங்கப்படுவது சந்தேகமே என்ற தகவல்கள் வதந்திகளாக ஆரம்பித்து, செய்தியாகும் நிலையில் உள்ளதாக கோடம்பாக்கப் புள்ளிகள் கூறுகிறார்கள்.
காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை.
இதுகுறித்து எதுவும் பேசவும் மறுக்கின்றனர் தொடர்புடைய டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்கள்.
ஏற்கெனவே இந்தக் கதையை மாபெரும் படமாக எடுக்க முயன்றவர் அமரர் எம்ஜிஆர். இயக்கநர் மகேந்திரனை வைத்து திரைக்கதையை முழுமையாக அவர் உருவாக்கிய நிலையில் தமிழக முதல்வராகிவிட, பொன்னியின் செல்வன் நாவல் வடிவிலேயே தொடர்ந்தது.
அதற்குப் பிறகு இந்த முயற்சியில் இறங்குவதா அறிவித்தார் கமல்ஹாஸன். ஆனால் அதுவும் அறிவிப்புடன் நின்றுவிட்டது.
ஆனால் மணிரத்னம், ஷூட்டிங் லொகேஷன்கள் கூட முடிவு செய்து வைத்திருந்த நிலையில் இப்படி செய்தி வந்துள்ளது. இது செய்தியா வதந்தியா... பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:
Post a Comment