Monday, March 21, 2011

எஸ்.ஏ.சி.க்கு ஷங்கர் புகழாரம்:

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் டைரக்டர் ஷங்கரும் ஒருவர்.
தமிழ் சினிமாவை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியவர்.
ஷங்கர் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. விஜய்யின் அப்பாவும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்தபோது அவரிடம் கற்ற விஷயங்கள் விலைமதிக்க முடியாதவை என்று எஸ்.ஏ.சி.,க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஷங்கர் கூறியதாவது, என்னுடைய 23வது வயதில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அப்போதெல்லாம் பொறுப்பில்லாமல் செயல்பட்டேன். ஒருநாள் ஏஸ்.ஏ.சி., என்னை கூப்பிட்டு சத்தம் போட்டார். கஷ்டப்பட்டு உழைக்கவில்லையென்றால் வாழ்க்கையில் எதையுமே உன்னால் சாதிக்க முடியாது என்று அறிவுறுத்தினார்.
அவருடைய இந்த வார்த்தை என்னை முற்றிலுமாக மாற்றியது. அன்று முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன், இன்று வாழ்க்கையில் நல்ல நிலையை எட்டியிருக்கிறேன். நான் இந்த நிலைக்கு வருவதற்கு அவர் தான் காரணம்.
அதேபோல் விஜய்யும், அவரது அப்பாவை போல பிறருக்கு மரியாதை கொடுப்பது, சூட்டிங்கில் ஒரு ஈடுபாடோடு நடிப்பது கடுமையாக உழைப்பது என்று அசத்துகிறார். விஜய்யுடன் இணைந்து படம் பண்ணும்போது அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் என்று புகழ்ந்து கூறுகிறார்.
தற்போது விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து நண்பன் என்ற படத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். இப்படம் இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...