விஜய்யின் “காவலன்” படம் மூன்று மாதங்களுக்கு முன் ரிலீசானது. தற்போது “வேலாயுதம்”, “நண்பன்” படங்களில் நடித்து வருகிறார். “வேலாயுதம்” படப்பிடிப்பு 80 சதவீதம் முடி வடைந்து விட்டது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோட்பானி, ஜெனிலியா நடிக்கின்றனர்.
ராஜா இயக்குகிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். விஜய் பால்காரர் வேடத்தில் வருகிறார். ஜெனிலியா நிருபராக வருகிறார். விஜய்யை வைத்து ராஜா இயக்கும் முதல் படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற ஹிட் படங்களை ராஜா இயக்கியுள்ளார்.
வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வேலாயுதம் ரிலீசை விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment