Monday, April 18, 2011

நண்பன் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பம்


நண்பன் பட ரீம் முதலாம் கட்டப்படப்பிடிப்பை ஊட்டியிலும் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை தெக்ரானிலும் எடுத்து முடித்தது.இப்பொழுது நண்பன் படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு இனிதே தொடங்கியுள்ளது.


இந்த படப்பிடிப்பு அந்தமான் பகுதிகளில் இடம்பெற்கிறது இதனை தொடர்ந்து நண்பன் படக்குழு ஸ்பெயினுக்கு செல்ல உள்ளன.விஜய் இலியானா பங்கு பெறும் பாடல் காட்சி அங்கு படம்பிடிக்க உள்ளனர்.சங்கர் தொழிநுட்ப்ப ரீதியாக பல மாற்றங்களை செய்து வெளியிட உள்ளார்.

அந்தமானின் கடற்கரையோரங்களில் படப்பிடிப்பு இடம்பெறுகிறது.இயற்கை அழகுடன் காணப்படும் அந்தமான் பகுதி கண்களை குளிரவைக்க மனோஜ் பரமகம்ஷா படமாக்குகின்றார்.

படத்தின் இறுதிப்பகுதி இங்கு படமாக்கப்படுகிறது.ஒரு கிழமை மாத்திரமே அந்தமானில் படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.அங்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தில் இடம்பெறும் ஏனைய நட்சத்திரங்கள் நாடு திரும்ப உள்ளனர்.

விஜயும் இலியானாவும் பாடல் காட்சியை படமாக்க ஸ்பெயின் செல்ல உள்ளனர்.படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.ஒரு பாடல் ஏற்கனவே ஷோபியின் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு தொடர்பான படங்கள் மிக விரைவில் அப்டேட் செய்யப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...